மாஸ்டருக்குப் பிறகு கொடூர வில்லனாக விஜய்சேதுபதி – வெளியானது உப்பேன்னா டிரைலர்!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:38 IST)
விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள உப்பேன்னா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பல இடங்களில் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்தார். இதனால் விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் புகழ்பாட தொடங்கினர். இந்நிலையில் தமிழைத் தவிர பல மொழிகளில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அப்படி அவர் தெலுங்கில் வில்லனாக நடிக்க ஓப்புக்கொண்ட திரைப்படம்தான் உப்பேன்னா. ஆணவக் கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறதாம். இந்த படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. பஞ்சா வைஷ்ணவ தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இப்படத்தை புச்சி பாபு சனா எழுதி இயக்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்