அக்டோபர் மாதம் கொரோனா 3வது அலை !

Webdunia
ஞாயிறு, 9 மே 2021 (12:34 IST)
அக்டோபர் மாதம் கொரோனா 3வது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் கணிப்பு. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,03,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,22,96,414 ஆக உயர்ந்தது.
 
மேலும், புதிதாக 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  2,42,362 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,86,444 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  1,83,17,404 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில், கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் தற்போது உள்ள கொரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு மேற்கொண்ட ஆய்வில், கொரோனா 2வது அலை ஜூலை மாதம் முடிவுக்கு வரும் எனவும் இதன் பின்னர் அக்டோபர் மாதம் 3வது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என பின்னர் தான் கணித்து கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்