இஸ்கான் அமைப்பு தலைவர் கைது விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து மத துறவி கைது மற்றும் ஜாமீன் மறுப்பு கவலை அளிப்பதாகவும் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய பல தாக்குதலை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.