கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,03,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,22,96,414 ஆக உயர்ந்தது.
மேலும், புதிதாக 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,42,362 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,86,444 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,17,404 ஆக உயர்ந்துள்ளது.