இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன. அந்த வகையில் தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில் கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி உள்ள நோயாளிகள் சித்த மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்