கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி: டிடிவி தினகரன் இரங்கல்

ஞாயிறு, 9 மே 2021 (10:39 IST)
மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கொரோனா நோயாளிகளுக்கு 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று கொரோனாவுக்கு பலியானார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரையை சேர்ந்த சண்முகப்பிரியா என்ற மருத்துவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மதுரை ராஜாஜி அரசு மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருடைய மறைவு மருத்துவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்ரியா மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது
 
8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், கொரோனா  தடுப்புப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த செய்தி பெரும் வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்