சமையல் எண்ணெய் விலை அதிரடி குறைப்பு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (12:58 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சமையல் எண்ணெய் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது இந்தியாவில் சில்லரை வணிகத்தில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
சமையல் எண்ணெயை ஒரு லிட்டருக்கு ரூ 5 முதல் 20 வரை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்