மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரை கவுரவிக்க அருங்காட்சியம், மியூசிக் அகாடமி...

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:01 IST)
இந்தூரில் லதா மங்கேஷ்கர் சிலை நிறுவப்படும் என்றும் அவர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்தார்.

 
இந்திய திரையிசை பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர், குடியரசு தலைவர், மாநில முதல்வர்கள், திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறப்பை ஒட்டி 2 நாட்கள் தேசிய துக்க தினமாக மத்திய அரசு அறிவித்தது. 
 
இந்நிலையில் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், போபாலில் மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் அவர், லதா மங்கேஷ்கர் பிறந்த ஊரான இந்தூரில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் இடம்பெறும் அருங்காட்சியகமும், மியூசிக் அகாடமியும் நிறுவப்படும் என்று கூறினார்.
 
மேலும், லதா மங்கேஷ்கர் பெயரில் இந்தூரில் கல்லூரி அமைக்கப்படும் என்றும் இந்தூரில் லதா மங்கேஷ்கர் சிலை நிறுவப்படும் என்றும் அவர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்