இதுதான் இந்தியா; லதா மங்கேஷ்கர் உடலுக்கு ஷாரூக்கான் மரியாதை! – வைரலாகும் புகைப்படம்!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:09 IST)
மறைந்த பிரபல திரையிசை பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு நடிகர் ஷாரூக்கான் இஸ்லாமிய முறைப்படி மரியாதை செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்திய திரையிசை பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர், குடியரசு தலைவர், மாநில முதல்வர்கள், திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறப்பை ஒட்டி 2 நாட்கள் தேசிய துக்க தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கர் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. அதில் இந்தி நடிகர் ஷாரூக்கானும் கலந்து கொண்டார். இறுதி சடங்கில் ஷாரூக்கான் இஸ்லாமிய முறைப்படி கைகளை ஏந்தி பிரார்த்திப்பதும், அருகில் அவரது பெண் மேனேஜர் பூஜா தத்லானி இந்து முறைப்படி கைகளை கூப்பி பிரார்த்திப்பதுமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவின் மத ஒற்றுமைக்கு இது ஒரு உதாரணம் என பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்