லதா மங்கேஷ்கருடன் பேசியவை மறக்க முடியாது..! – பிரதமர் மோடி இரங்கல்!

ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (10:42 IST)
பிரபல திரையிசை பாடகி லதா மங்கேஷ்கர் காலமான நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் மிகவும் முதுபெரும் பிண்ணனி பாடகிகளில் முக்கியமானவர் லதா மங்கேஷ்கர். இந்தி, பெங்காலி, தமிழ், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கொரொனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு மாதமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவின் முதுபெரும் பாடகியான லதா மங்கேஷ்கரின் மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “சகோதரி லதாவின் பாடல்கள் பல உணர்வுகளை வெளிப்படுத்தியவை. பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகின் மாற்றங்களை அவர் நெருக்கமாக கண்டார். லதா மங்கேஷ்கர் உடனான உரையாடல்கள் மறக்க முடியாதவை. அவரது குடும்பத்தினரிடம் எனது இரங்கலை தெரிவித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்