இந்தியாவின் இசை குயில் மறைந்தது; லதா மங்கேஷ்கர் காலமானார்!

ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (09:54 IST)
பிரபல திரையிசை பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சினிமாவில் மிகவும் முதுபெரும் பிண்ணனி பாடகிகளில் முக்கியமானவர் லதா மங்கேஷ்கர். இந்தி, பெங்காலி, தமிழ், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கொரொனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு மாதமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவின் முதுபெரும் பாடகியான லதா மங்கேஷ்கரின் மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்