''சந்திரயான்-3 வெற்றி ''- இஸ்ரோவுக்கு வாழ்த்து கூறிய ராகுல்காந்தி

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (19:42 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி, நிலவில் இன்று  வெற்றிகரமாகத் தரையிறக்கிய நிலையில், கேரள மாநில வயநாடு தொகுதி எம்பியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இன்று விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக  நிலவில் தரையில் இறங்கி சாதனை படைத்துள்ளது.

சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா  நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ளது.

இன்று, சந்திராயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் செயல்முறையில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்பட்டு,  விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிச் சாதனை படைத்தது.

இதற்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலரும் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் கூறி வரும் நிலையில், எம்பி., ராகுல் காந்தி இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

அதில், ''இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென்துருவததிற்கு சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்கி இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பால் இது சாத்தியமாகியுள்ளது.  கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் இந்தியா விண்வெளித்துறையில் புதிய உச்சங்களைத் தொட்டு, இளம்தலைமுறைக்கு உற்வேகமூட்டி  வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்