சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா, சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி அங்கு நீர் உள்ளதாக கண்டறிந்தது.
இதையடுத்து, சமீபத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பிய நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
அதேபோல், சந்திராயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் செயல்முறையில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்பட்டு, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிச் சாதனை படைத்தது.
தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: வாழ்த்துகள் இஸ்ரோ. சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. சந்திரனின் மேற்பரப்பை தொட்ட 4 வது பெரிய நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது. அயராத முயற்சி மற்றும் புதுமைக்காக உழைத்த குழுவிற்கும் பாராட்டுகள்… இந்தியா விண்வெளி ஆய்வில் ஒரு மாபெரும் பாய்ச்சல் என்று தெரிவித்துள்ளார்.