ஆண் வேடமிட்டு மாமியார் மீது தாக்குதல் நடத்திய பெண்!

சனி, 13 மே 2023 (18:47 IST)
கேரள மாநிலத்தில் ஷர்ட், பேண்ட், ஷீ அணிந்துகொண்டு, முகமூடி கட்டியபடி வந்து தன் மாமியாரை தாக்கியுள்ளார் மருமகள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர்  இரண்டாவது மகன் ரெதீஸ் குமார். இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில், போதைக்கு அடிமையான ரெதீஸ்குமார் தன் மனைவி சுகன்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதைப் பற்றி எதுவும் தட்டிக் கேட்காமலும்  தன் மகனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாமியார் வசந்தி மீது மாமியார் கோபத்தில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று, ரெதீஸ்குமாரின் சட்டை, ஜீன்ஸ், ஷூ அணிந்துகொண்டு, மாமியார் வசந்தியை தாக்கியுள்ளார் சுகன்யா.

அடித்தவர் யார் என்று அவருக்குத் தெரியவில்லை. இதுபற்றி போலீஸாரிடம் புகாரளித்த நிலையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது,ஆண்வேடமிட்டு, சுகன்யா மாமியாரை தாக்கியது தெரியவந்தது.

எனவே, அவரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்