முதல் காதலரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த இளம்பெண்!
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (19:25 IST)
கேரள மாநிலத்தின் இரண்டாவது காதலுடன் சேர்ந்து முன்னாள் காதலனை பெண் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள வர்க்கலையைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா( 19). இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அப்போது, லட்சுமி பிரியாவுக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, காதல் உருவாகி, இருவரும் தனிமையில் சந்து வந்தனர்.
இந்த நிலையில், லட்சுமி பிரியாவுக்கும், இன்னொரு மாணவருடன் தொடர்பு ஏற்பட்டதால், முதல் காதலரை சந்திக்க மறுத்தார்.
இதையறிந்த முதல் காதலர், தன்னுடனான காதலை தொடரவேண்டுமென்று கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த லட்சுமி பிரியா, இரண்டாவது காதலரிடம் கூறவே, அவர் முதல் காதலரிடம் பேச வேண்டாம் என்று கூறினார்.
முதல் காதலர் லட்சுமி பிரியாவை தொடந்து சந்திக்க முயற்சித்த நிலையில், நேற்று முன் தினம் தன்னை சந்திக்குமாறு லட்சுமி பிரியா கூறினார்.
இதை நம்பி லட்சுமி பிரியா வரச்சொன்ன இடத்திற்குச் சென்ற முதல் காதலரை, லட்சுமி பிரியா மற்றும் இரண்டாவது காததல் இணைந்து தாக்கி, அவரை நிர்வாணப்படுத்தி, சித்ரவதை செய்தனர்.
அந்த இளைஞர் படுகாயங்களுடன் இருப்பதைப் பார்த்து அருகிலுள்ளோர் அவரை மருத்துவமனை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து லட்சுமி பிரியாவின் 2 வது காதலன் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.