இந்து கோவில்களில் உள்ள அதிகாரிகள் பணி இனி இந்துக்களுக்கு மட்டுமே வழங்க புதிய சட்டம் இயற்றப்படும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு மதமும் தனித்த கலாச்சாரம் மற்றும் சம்பிரதாயத்தை உடையது என்றும், அந்த கடவுளின் பழக்கவழக்கங்கள், மரபுகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடவுள் மற்றும் சடங்குகளை விட யாரும் பெரியவர்கள் இல்லை என்று தெரிவித்தார்.
எனவே தான் ஆந்திர மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. எந்த வழிபாட்டு தலமாக இருந்தாலும், அதாவது மசூதியாக இருந்தாலும், தேவாலயமாக இருந்தாலும், கோவிலாக இருந்தாலும், அந்தந்த மதத்தினருக்கே அந்த வழிபாட்டு தலங்களில் பதவி வழங்கப்படும்.
குறிப்பாக, இந்து கோவில்களில், இந்துக்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.