எகிறும் கொரோனா; ஆக்சிஜனை தயாராக வைத்திருங்கள்! – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (10:58 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் கையிருப்பை உறுதிபடுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. முன்னதாக பரவிய டெல்டா வகை கொரோனாவும், ஒமிக்ரானும் தற்போது சேர்ந்து பரவ தொடங்கியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு 2 லட்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய அரசு, மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் கையிருப்பை அதிகபடுத்தும்படியும், குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த இரண்டாம் அலை கொரோனா பரவலின்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்