கல்லூரி நண்பர்களுடன் ரி யூனியன்… கூட்டத்தில் தனியாக தெரியும் மம்மூட்டி!

புதன், 12 ஜனவரி 2022 (10:23 IST)
நடிகர் மம்மூட்டி தனது கல்லூரி நண்பர்களுடனான மறுகூடுகை புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் மம்மூட்டி இந்திய சினிமாவிலேயே அதிக படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர். 70 வயதிலும் இளமையான தோற்றத்தை பேணிவரும் அவர் இன்னும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய கல்லூரி நண்பர்களுடனான ரி யூனியனில் கலந்துகொண்டார். அதில் கலந்துகொண்ட அனைவரும் முதுமையான தோற்றத்தில் இருக்க மம்மூட்டி மட்டும் இளைஞர் போன்ற தோற்றத்தில் காணப்படும் புகைப்படம் வெளியாகியது. இதையடுத்து இணையத்தில் அந்த புகைப்படம் அதிகளவில் பகிரப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்