அன்னை லெட்சுமி அருளால்.. எல்லாருக்குமான அம்சம் பட்ஜெட்டில் இருக்கும்! - பிரதமர் மோடி!

Prasanth Karthick
வெள்ளி, 31 ஜனவரி 2025 (11:36 IST)

ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் அதில் கலந்து கொள்ளும் முன் லெட்சுமி தேவியை வணங்கி பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

 

நாளை ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி “ பட்ஜெட் தாக்கலுக்கு முன் அன்னை லெட்சுமியை வழிபட்டுவிட்டு வருகிறேன். ஏழை, எளிய மக்களை அன்னை லட்சுமி ஆசீர்வதிக்க பிரார்த்தித்தேன். 

 

இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன். அனைவருக்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளது. நாளை தாக்கலாகும் பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்யும். இந்த கூட்டத்தொடரில் நிறைய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மக்களின் மேம்பாட்டிற்காக நாள்தோறும் பணியாற்றி வருகிறேன். 

 

மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்