இந்திய நாடாளுமன்றத்தை விட பிற நாடுகளில் மோடி செலவிட்ட நேரம் அதிகம்: சசிதரூர் எம்பி

Mahendran

திங்கள், 27 ஜனவரி 2025 (15:25 IST)
பிரதமர் மோடி இந்திய நாடாளுமன்றத்தில் இருந்த நேரத்தை விட பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் இருந்த நேரம் அதிகம் என காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்வி சிந்தனை அரங்கு 2025 என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, ஜனநாயக நாட்டில் மக்கள் நலனுக்கும், அவர்களின் விருப்பத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை.

எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஒருபோதும் முந்தைய ஆட்சியில் தயங்கியதில்லை. "நான் அமைச்சராக இருந்தபோது, பாஜக எம்பிகள் மட்டுமின்றி எந்த அமைச்சர்களையும் அழைப்பையும் நான் நிராகரித்ததில்லை.

ஆனால் இன்று அழைப்புகளே இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செலவு செய்த நேரத்தை விட பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் தான் அவர் அதிக நேரம் செலவிடுகிறார். நாடாளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் எதிரியாக பார்ப்பது ஜனநாயக நல்லது அல்ல" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்