ரஷ்யாவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (14:57 IST)
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவை நோக்கி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய தலை நகர் மாஸ்கோவில் இருந்து அசூர் ஏர் நிறுவனத்தின் விமானம் இன்று 240 பயணிகளுடன் இன்று கோவா மாநிலத்தில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் அதிகாலையில் தரையிறங்க இருந்தது.

அப்போது, விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக  நள்ளிரவில் ஒரு மின்னஞ்சல் வந்ததை அடுத்து, விமானம் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காமல் திருப்பி விட்டனர்.

இதற்கு முன்னதாகவும், மாஸ்கோவில் இருந்து கோவாவுக்கு வந்த மற்றொரு விமானமும், குஜராத் மா நிலம் ஜாம்  நகரில்  தரையிறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டி மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்