குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இம்மா நிலத்தில் உள்ள உத்தராயண பண்டிகையின் போது, மக்கள் காற்றாடிகளை பறக்கவிட்டு கொண்டாடுவர்.
இப்பட்டம் விடுவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், இப்பட்டம் பறக்கும்போது, 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 176 பேர் காயமடைந்துள்ளதாக குஜராத் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மஞ்சாநூல் கழுத்தில் அறுத்து 130 பேர் காயமடைந்துள்ளனர். பட்டம் விடும் போது உயரமாக இடங்களில் இருந்து தவறி விழுந்து 46 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.