பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை கேட்டதாகவும் அந்த பதவி தர மறுத்ததால் தான் அவர் கூட்டணியிலிருந்து விலகியதாகவும்செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அழைத்துள்ளார்
இந்த நிலையில் இதுகுறித்து பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில் மோடி கருத்து கூறுகையில் துணை குடியரசு தலைவர் பதவி கிடைக்கும் என நிதிஷ்குமார் எதிர்பார்ப்பதாகவும், அதற்கு பாஜக மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் கூட்டணியில் இருந்து விலகி விட்டதாகவும் கூறியுள்ளார்
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 6 முறை பிரதமர் மோடி நிதீஷ் குமாரை சந்தித்ததாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அமித்ஷாவை சந்தித்த நிதிஷ்குமார், எந்த பிரச்சனையும் இல்லை என உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்