கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார்: 2024 தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பா?

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (08:10 IST)
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவின் கட்சியின் ஆதரவுடன் தற்போது மீண்டும் முதலமைச்சர் பதவியை பிடித்துள்ளார். இந்த முறை அவர் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி ஆட்சி செய்வார் என்று கூறப்படுகிறது 
 
பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாகவே அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது நிதிஷ்குமார் கட்சி எதிர்க்கட்சிகள் உடன் கைகோர்த்துள்ளதால் வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி குறையும் என்று கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது
 
சி வோட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தற்போது மக்களவை தேர்தல் நடந்தால் பீகாரில் பாஜக கூட்டணியின் வாக்கு வங்கி 13% சரியும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய நிலையில் தேர்தல் வந்தால் அக்கட்சிக்கு 14 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளத். ஆனால் இன்னும் ஒன்றரை வருடம் தேர்தலுக்கு காலம் இருப்பதால் அதற்குள் பாஜக பீகாரில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்