அயோத்தியை அடுத்து பத்ரிநாத் தொகுதியிலும் பாஜக தோல்வி.. மோடி, அமித்ஷா அதிர்ச்சி..!

Mahendran
சனி, 13 ஜூலை 2024 (16:11 IST)
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் தற்போது பத்ரிநாத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்துள்ளது.

பத்ரிநாத் சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார் என்பதும் பாஜக வேட்பாளர் பின்னடைவில் உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திர பண்டாரி என்பவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து பாஜக வேட்பாளராக தேர்தலில் களம் இறங்கினார்.

ஆனால் அவர் 23 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார், ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில சுற்றுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி என்று கூறப்படுகிறது.

அதைப்போல் நாடு முழுவதும் நடந்த 13 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் எதிர்க்கட்சிக்கு தான் வெற்றி பெற்றுள்ளன என்பதும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி முகத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்