முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள்..! தற்காலிகமாக செயல்பட தீர்ப்பாயம் அனுமதி..!!

Senthil Velan
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (13:34 IST)
வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் தற்காலிகமாக செயல்பட தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது. 
 
2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியத்துடன் ரூ.210 கோடி அபராதமும் வருமான வரித்துறை விதித்தது. பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள கிரவுட் ஃபண்டிங் வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.
 
இது குறித்து வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருமானவரித்துறை கண்காணிப்பின் கீழ் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் தற்காலிகமாக இயக்கிக் கொள்ள அனுமதி அளித்தனர்.

ALSO READ: தொழிலதிபர் வீட்டுக்குள் நுழைந்து அட்டகாசம்.. கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் கைது..!!

இடைக்கால நிவாரணம் தொடர்பான விசாரணையை வரும் புதன்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்