இதை அடுத்து, மக்களவை தேர்தலுக்கான பணிகள், கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
டி ஆர் பாலு தலைமையிலான குழுவினர், 5 பேர் கொண்ட காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 9 தொகுதிகளை ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.