கருத்தடை மாத்திரையில் சயனைடு – 32 பெண்களைக் கொன்ற கொடுரன் வழக்கில் தீர்ப்பு !

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (10:55 IST)
பெங்களூவைச் சேர்ந்த சீரியல் கொலைகாரான சயனைடு மோகன் சம்மந்தப்பட்ட கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட இருக்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த மோகன் என்பவர் தன்னுடன் பழகும் பெண்களை தன் வலையில் விழ வைத்து அவர்களோடு செக்ஸ் முடிந்தபின் கருத்தடை மாத்திரைகளில் சயனைடைக் கலந்து கொடுத்து அவர்களைக் கொல்லும் கொடூர வழக்கம் உள்ளவன். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் இது போல 32 பெண்களைக் கொன்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு இசை ஆசிரியர் ஒருவரை இதுபோல கொன்ற வழக்கில் முதல்முதலாக இதுபற்றி வெளி உலகுக்குத் தெரியவர மோகனை தேடிய போலீஸ் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து விசாரணையில் அவர் மேல் உள்ள பெரும்பாலான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு விட்டன. இன்னும் 16 வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவருக்கான தண்டனை செப்டம்பர் 25 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்