3 வது நாளாக அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டம்!

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (14:53 IST)
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கவர்நரை சந்திக்க அனுமதி வழங்காத காரணத்தால் மூன்றாவது நாளான இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
 
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு ஆளும் அரசு செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டி இருந்து வருகிறது. 
 
அரசின் திட்டங்களை செயல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மறுத்து வருகின்றனராம். அதோடு, தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு பிறகு, அமைச்சர்களுடனான கூட்டத்தையும் ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். 
 
இதனால், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்த்தார். மேலும், அவரை சந்திக்க சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. 
 
பல மணி நேரம் காத்திருந்தும் அனுமதி தராத்தால், அவர் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட. அவருடன் இணைந்து அமைச்சர்களும் உள்ளனர். தற்போது 3 வது நாளாக இந்த தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்