இந்த என்கவுண்டரில் நான்கு ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ரவுடிகளில் ஒருவரான ராஜேஷ் பார்தி என்பவர் மீது கொலை, கொள்ளை , ஆள்கடத்தல் என 25 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்தான் இந்த பகுதியில் உள்ள ரவுடிகள் கும்பலுக்கு தலைவன் என்றும் கூறப்படுகிறது. இந்த என்கவுண்டரால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.