ஃபிட்னஸ் சேலஞ்சை விட மாநில வளர்ச்சியே முக்கியம் - மோடியை தாக்கிய கர்நாடக முதல்வர்

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (13:40 IST)
தனக்கு ஃபிட்னஸ் சேலஞ் விடுத்த பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஃபிட்னஸ் சேலஞ்சை விட, எனது மாநில வளர்ச்சியே முக்கியம் என ரிப்ளை செய்துள்ளார்.
சமீபத்தில் கோலியின் ஃபிட்னஸ் சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என  கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தான் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  உடற்பயிற்சி மற்றும் யோகா புத்துணர்ச்சியூட்டுவதாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி இந்த ஃபிட்னஸ் சேலஞ்சை கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு விடுத்தார். 
 
இதற்கு பதிலளித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, என் மீதும் என் உடல் பற்றியும் அக்கறை கொண்டு பேசியுள்ள பிரதமர் மோடிக்கு நன்றி, உடற்பயிற்சி முக்கியம் தான் ஆனால் அதைவிட எனது மாநிலத்தின் வளர்ச்சி. எனவே மாநிலம் வளர்ச்சி அடைய உங்களது ஆதரவு தேவை என குமாரசாமி மோடி சேலஞ்சிற்கு பதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்