2 குழந்தைகளை மறைத்து 3வது திருமணம்; 6 லட்சம் சுருட்டல்! – பெண்ணுக்கு வலைவீச்சு!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (13:09 IST)
ஆந்திராவில் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டு மூன்றாவது திருமணம் செய்து பணம் பறித்த பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில்குமார். இவருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த சுஹாசினி என்ற பெண்ணுக்கும் நட்பாகி உள்ளது. பின்னர் இது காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தான் ஒரு அனாதை என்று கூறி சுஹாசினி சுனில்குமாரை திருமணம் செய்துள்ளார்.

பின்னர் சுஹாசினிக்கு சுனில் குடும்பத்தினர் நகை வாங்கி தந்துள்ளனர். பின்னர் தன்னை சிறுவயதிலிருந்து வளர்த்த மாமாவிற்கு உடல்நல குறைவு என்று செலவுக்காக சுனிலிடம் 6 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார். இதுகுறித்து சுனில் குடும்பத்தினர் கேட்டதற்கு அடுத்த நாளே சுஹாசினி மாயமாகியுள்ளார்.

பின்னர் சுனிலுக்கு போனில் அழைத்த அவர் தனக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக கூறியுள்ள சுஹாசினி, தன்னைப்பற்றி போலீஸில் புகார் அளிக்கக்கூடாது என்றும் சுனிலை மிரட்டியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து சுனில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுஹாசினியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்