சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் என்ற திரைப்படத்தில் பெண் போலீசார் ஒருவர் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பவற்றை தெளிவாக அந்த படத்தில் காண்பித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது போலவே பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவித்த முதல்வர் அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் நன்றி என சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
டைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் "மிகமிக அவசரம்" படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் படம் உருவாகவும் மக்களிடம் சென்று சேரவும் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.