முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் சபாநாயகர் அப்பாவு!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (12:55 IST)
முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் சபாநாயகர் அப்பாவு!
முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, காமராஜ் ஆகியோர் மீது சென்னை ஐகோர்ட்டில் தொடுத்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
அதிமுக ஆட்சியில் எல்இடி விளக்குகள் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் பொது வழங்கல் அரிசி திட்டத்தில் முறைகேடு நடந்ததாக அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அப்பாவு புகார் அளித்தார்
 
இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்