கொரோனாவுக்கு எதிராக போராடும் அனைவருக்கும் நன்றி: அமித்ஷா

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (17:24 IST)
கொரோனாவுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து போராடும் அனைவருக்கும் நன்றி என பாஜகவின் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
பீகாரில் வரும் நவம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டிஜிட்டல் பிரச்சாரம் செய்யும் வகையில் பீகார் பாஜகவினரிடையே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ‘பயங்கரவாதிகளுக்கு பதிலடியாக சர்ஜிகல் ஸ்டிரைக், வான்வழித் தாக்குதல் என நடத்தினோம் என்றும், எல்லைகளைப் பாதுகாப்பதில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகள் அமெரிக்கா,  இஸ்ரேல் என்றும், தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் வரிசையில் இந்தியாவும் எல்லை பாதுகாப்புக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்வதை உலகம் பார்க்கிறது என்றும் அமித்ஷா ஆவேசமாக பேசினார்.
 
மேலும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்ட திருத்தத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார் என்றும், பீகார் சட்டசபை தேர்தலில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
 
பொறுமை இழந்து நடக்க தொடங்கியவர்களை மீட்டு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்றும் கூறிய அமித்ஷா, இடம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தில் 85% மத்திய அரசு செலுத்தியது என்றும், 15%தான் மாநில அரசுகள் கொடுத்தன என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்