ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம்.. இஸ்ரோ வெளியீடு

Mahendran
திங்கள், 10 ஜூன் 2024 (14:50 IST)
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பிய புதிய ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 
கடந்த மே மாதம் ஏற்பட்ட சூரியப் புயலின் போது ஆதித்யா எல்1 விண்கலம் எடுத்த புகைப்படம் இது என இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. மேலும் சூரியனில் ஏற்படும் காந்த விசை புயலுக்கு எக்ஸ் மற்றும் எம் வகை சூரிய கதிர்கள் தான் காரணம் என்றும் இந்த புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
சூரியனின் மேற்புற வளிமண்டல அடுக்கில் இருந்து வெளியாகும் அயனியாக்கப்பட்ட துகள்களுடன் எக்ஸ், எம் வகை சூரிய கதிர்களுக்கு தொடர்பு என இந்த புகைப்படத்திற்கு இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
 
முன்னதாக  சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏவப்பட்ட நிலையில் அந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக  நிலை நிறுத்தப்பட்டு அவ்வப்போது புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது.மேலும் சூரியனின் அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படம் எடுத்து அனுப்பி உள்ள நிலையில் அந்த தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
 
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்