கொ.ம.தே.க வேட்பாளர் சூர்யமூர்த்தி..! உதயசூரியன் சின்னத்தில் போட்டி..!!

Senthil Velan

திங்கள், 18 மார்ச் 2024 (18:24 IST)
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூர்யமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. 
 
தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.
 
தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று உறுதியானது. திமுக போட்டியிடும் 21 தொகுதிகள், காங்கிரஸ் போட்டியிடும் பத்து தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடும் இரண்டு தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் இரண்டு தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் ஒரு தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ALSO READ: செந்தில் பாலாஜி காவல் 27-வது முறையாக நீட்டிப்பு.! மார்ச் 21ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!!
 
அதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் வேட்பாளர் திமுக சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூர்யமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்