இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Siva

ஞாயிறு, 19 மே 2024 (07:37 IST)
இந்திய இளைஞர்களை கோவிலுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உடியனுர் தேவி கோயிலில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ தலைவர் சோமநாத் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் அவர் பேசிய போது ’கோவில் என்பது முதியோர்கள் வந்து கடவுளின் நாமத்தை சொல்லும் இடமாக இருக்கக்கூடாது என்றும் கோவில்கள் சமுதாயத்தை மாற்றி அமைக்கும் இடமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக இந்தியாவில் உள்ள இளைஞர்களை கோவிலுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளைஞர்களை கவரும் வகையில் கோவில் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இளைஞர்களை கோவிலுக்கு இருக்கும் வகையில் கோவில் நிர்வாகிகள் செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை கோவிலுக்கு வரவழைக்க அங்கு நூலகங்களை அமைக்கலாம் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

மேலும் இளைஞர்களை கோவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்தி அவர்களுடன் பல்வேறு விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்