ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. பொதுமக்கள் நிம்மதி..!

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (13:21 IST)
ஆதார் கார்டு புதுப்பிக்க செப்டம்பர் 15ஆம் தேதி கடைசி தேதி என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவித்து இருந்த  நிலையில் 10 ஆண்டு நிறைவடைந்தவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் செய்தி வெளியானது.

மேலும் ஆதார் அட்டையை  ஆதார் மையங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்து எளிமையாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆதார் அட்டையை கட்டணம் இன்றி புதுப்பிக்க செப்டம்பர் 15ஆம் தேதி கடைசி தினம் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 14ஆம் தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ALSO READ: நேரடி விவாதத்திற்கு பின் எகிறும் ஆதரவு.. கமலா ஹாரிஸ் வெற்றி உறுதியா?

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்