திருப்பதியில் கூடுதல் லட்டு வாங்க இது கட்டாயம்.! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

Senthil Velan

வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (17:19 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே கூடுதலாக ஒரு லட்டு ரூ.50 க்கு வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு  நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு வேண்டும் என்பவர்கள் லட்டு கவுன்டரில் நேரில் சென்று, ரூ.50 செலுத்தி லட்டுககளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடைமுறையே தற்போது வரை வழக்கத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் இடைத்தரகர்கள் மூலம் லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


ALSO READ: பெண்ணின் திருமண வயது அதிகரிப்பு..! இமாச்சலில் மசோதா நிறைவேற்றம்..!!


பக்தர்களுக்கு ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே கூடுதலாக ஒரு லட்டு ரூ.50 க்கு வழங்கப்படும் என்றும் திருப்பதி  தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்