ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாதா? தமிழக அரசு விளக்கம்

Mahendran

புதன், 4 செப்டம்பர் 2024 (10:52 IST)
ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்காட்டால் ரேஷன் கடையில் பொருட்கள் கிடையாது என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின் மீது தோல்வி அடையும்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அத்தியாசமான பொருட்கள் வழங்கப்படுகின்றன என்றும் எனவே கைரேகை சரி பார்க்காத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவது இல்லை என்ற செய்தியை முற்றிலும் தவறானது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுவதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்