கற்பழிப்பு புகார் - காவல் நிலையத்திற்கு கருவை எடுத்துச் சென்ற பெண்

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (10:36 IST)
உத்திர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தனது 5 மாத கருவை கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உத்திர பிரதேசம் உள்ளது.
 
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை மனோஜ்(22) என்ற வாலிபர் 5 மாதங்களுக்கு முன் மிரட்டி கற்பழித்துள்ளார். அந்த பெண்ணை தொடர்ந்து கற்பழித்து வந்த மனோஜ், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் உன்னையும் உன் குடும்பத்தையும் காலி செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் இந்த கொடூரத்தை வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார் அந்த இளம்பெண்.
 
இதனால் கர்ப்பமான அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அந்த கொடூரன் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளான். இதனால் மனமுடைந்த அந்த பெண், தனது கருவை பையில் போட்டு எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று அந்த கருவை காவலர்களிடம் காண்பித்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ந்துபோன காவல் துறையினர், கொடூரன் மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்து அவனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்