இந்த விஷயம் லட்சுமியின் வீட்டாருக்கு தெரிய வரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதனை கேட்காத லட்சுமி வீட்டில் இருந்து வெளியேறினார். இதனையறிந்த சுந்தர், மகளிடம் சென்று என்னுடன் வா என கேட்டுள்ளார். இதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்ததோடு, சுந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த, சுந்தர் பெற்ற மகள் என்றும் பாராமல் அவர் மீது பெட்ரோல் வைத்து கொளுத்தியுள்ளார். உடல் முழுவதும் தீ பரவி பரிதாபமாக லட்சுமி உயிரிழந்தார். மகளை பெற்ற அப்பாவே தீ வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.