கென்ய நாட்டு பெண்ணை 10 அயோக்கியர்கள் சேர்ந்து சீரழித்த கொடூரம்

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (11:42 IST)
டெல்லியில் கென்ய நாட்டு பெண்ணை 10 பேர் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 
கென்ய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் வேலை பார்த்து வருகிறார். அவர் சத்தர்புரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்.
 
இந்நிலையில் அந்த பெண் தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு, கால் டாக்ஸிக்காக ரோட்டில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரருகே ஒரு சொகுசு கார் வந்து நின்றது. அதிலிருந்தவர்கள் அந்த பெண்ணிடம், உங்களை நாங்கள் ட்ராப் செய்றோம் எனக் கூறியுள்ளனர்.
 
இதனை நம்பிய அந்த பெண், அவர்களுடன் காரில் சென்றுள்ளார். பின் அந்த பெண்ணை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவரை 10 நபர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிய அந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
 
புகாரின் பேரில் 8 பேரை கைது செய்துள்ள போலீஸார் மீதமுள்ள 2 அயோக்கியன்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்