ஐடியா ரீசார்ஜ் மீது கேஷ்பேக்...

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (11:24 IST)
ஐடியா நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு கேஷ்பேக் ஆஃபர்களை அறிவித்துள்ளது. கேஷ்பேக் மட்டுமின்றி பரிசுகளும் வழங்கப்படுகிறது. 
 
ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கூப்பன் வடிவில் வழங்கப்படும் இந்த தொகையை கொண்டு ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும். 
 
மற்றொரு திட்டத்தில் அன்லிமிட்டெட் ரீசார்ஜ் செய்யும் போது பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கார்கள், பைக்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வென்றிட முடியும். 
 
ஜூன் 5 முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை இந்த சலுகை செல்லுபடியாகும். இந்த சலுகையை பெற அனைத்து ரீசார்ஜ்களும் மை ஐடியா செயலி அல்லது ஐடியா வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்