மேற்கு வங்கம் மாநிலத்தில் சுவாசத் தொற்று பாதிப்பால் 7 குழந்தைகள் பலி

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (20:38 IST)
மேற்கு வங்கம் மாநிலத்தில்  கடந்த 24 மணி  நேரத்தில் சுவாசத் தொற்று பாதிப்பால் 7 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான  திரிணாமுல் காஙிரட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பல்வேறு பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில்,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுவாத் தொற்றுப் பாதிப்பால் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அடினோ தீ நுண்மி பாதிப்பினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்படிக் கூறினாலும், இதை மருத்துவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கனவே கொரொனா தொற்றுப் பரவி வரும் சூழலில் தற்போது, அடினோ வைரஸினால் 12 குழந்தைகள் வரை இறந்ததாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்