இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரொனா தொற்று உறுதி

புதன், 15 பிப்ரவரி 2023 (22:03 IST)
இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரொனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத்  கடந்தாண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி  மறைந்தார்.   அவர் மறைவுக்குப் பிறகு அவரது மகன் சார்லஸ் மன்னராக பதவியேற்றார்.

அதேபோல், இளவரசியாக இருந்து வந்த  அவரது மனைவி கமிலா ராணியாக பட்டம் பெற்றார்.

இதையடுத்து, மன்னர் 3 மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா  இங்கிலாந்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டிற்குப்பட்ட பல பகுதிகளுக்கு இவர்கள் செல்லும்போது, இவர்கள் இருவருக்கும் பலத்த வரவேற்பு அளித்து வருகிறது.

இந்தப் பொது நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்ட நிலையில், ராணி கமிலாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அதில், ராணி கமிலாவுக்கு, கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதால்,  அவரால் விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இத்தொற்றில் இருந்து குணமடைய தடுப்பூசி போட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென இங்கிலாந்து மக்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்