இந்நிலையில் சீனாவில் மேற்கொண்ட பரிசோதனையில் 95 சதவீதம் பேருக்கு உருமாறிய BF 7 ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தான் 95% பரவியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து, உலக நாடுகளுக்கும் எச்சரித்தது.
இந்த நிலையில், தற்போது கொரொனா தொற்று பரவல் குறைந்துள்ளது.
எனவே சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் 2,40,000 பயணிங்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், கொரொனா தொற்றால் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதிவரை 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.