சளி, காய்ச்சலுக்கான 59 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (09:13 IST)
சளி மற்றும் காய்ச்சலுக்காக விற்பனை செய்யப்படும் 59 வகை மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரை குறித்து தர கட்டுப்பாட்டு ஆய்வுகளை மத்திய மற்றும் மாநிலம் மருந்து தரகட்டுப்பாட்டு வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின் போது போலியான அல்லது தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் 
 
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 1251 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாகவும் இவை சளி மற்றும் காய்ச்சலுக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் பெரும்பாலும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தரமற்ற மருந்துகளின் விவரங்கள் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்