உயிரைப் பறித்த மருந்துகள்; 18 நிறுவனங்கள் உரிமம் ரத்து! – மத்திய அரசு அதிரடி!

புதன், 29 மார்ச் 2023 (10:18 IST)
இந்தியாவில் செயல்பட்டு வரும் மருந்து நிறுவனங்களில் தரமற்ற மருந்துகளை தயாரித்த நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மருந்து நிறுவனங்கள் மருந்துகள் தயாரித்து உலக நாடுகள் பலவற்றிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. சமீபத்தில் அவ்வாறாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட சிரப்புகளை குடித்த உஸ்பெகிஸ்தான், காம்பியா நாட்டுக் குழந்தைகள் உயிரிழந்ததாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள இந்திய அரசியம் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியது.

அதன்படி, டெல்லி, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள 76 மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சோதனைகளை நடத்தியது. அதில் தரமற்ற மருந்துகள் தயாரித்து வந்த 18 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 மருந்து நிறுவனங்களுக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்